'உத்தரவு மகாராஜா'

'உத்தரவு மகாராஜா'

1 mins read
0d20cddd-1989-4853-8bdc-6c4ea936f6ba
-

உதயா, பிரபு முக்கிய வேடங்களில் நடிக்கும் படம் 'உத்தரவு மகாராஜா'. ஆசிப் குரை‌ஷி என்ற புதுமுகம் இயக்குகிறார். இவர் நிறைய இந்தி, தமிழ், வங்க மொழிப் படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். இப்படத்தில் பிரியங்கா, சேரா, நிஷா என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மேலும், நாசர், கோவை சரளா, ஸ்ரீமன், மனோபாலா, எம்.எஸ். பாஸ்கர், பிரேம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். நீண்ட இடை வெளிக்குப் பின் குட்டி பத்மினியும் நடிக்க உள்ளாராம். "இது நகைச்சுவை, அதிரடி நிறைந்த திகில் கதையாக உருவாகிறது. இதுவரை வெளிவந்த திகில் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்," என்கிறார் ஆசிப் குரை‌ஷி.