உலக அழகியாக அண்மையில் தேர்வான மானுஷி சில்லாருக்குப் பிடித்தமான நடிகை பிரியங்கா சோப்ராவாம். இதுவரை திரைப்படங்களில் நடிப்பது குறித்து சிந்தித்ததே இல்லை என்கிறார். இருப்பினும் மானுஷி சில்லாருக்கு மனதோரம் ஓர் ஆசை இருக்கிறது. அது, நடிகர் அமீர் கானுடன் இணைந்து நடிக்க வேண்டுமாம். "அமீர் படங்களில் சமுதாயத்துக்கான ஒரு தகவல் இருக்கும். மேலும் கதாநாயகியின் திறமையை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களையும் எதிர்பார்க்கலாம். "சீனாவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் பங்கேற்க நான் சென்றபோது என்னுடன் போட்டியிட்ட பிற நாடுகளைச் சேர்ந்த அழகிகள் என்னை இந்தி திரைப்பட நடிகை என்றே நினைத்திருந்தனர்," என்கிறார் மனுஷி.
உலக அழகிக்கு பிடித்த நாயகன், நாயகி
1 mins read
-

