தன் மனதில் கனவுக் கதாபாத்திரம் என்று எதுவுமே இல்லை என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தனக்கு அமையும் பாத்திரங்கள் அனைத்தையும் கனவு பாத்திரங்களாகக் கருதிதான் நடிப்பதாகவும் சொல்கிறார். "புதுப் படங்களை ஒப்புக்கொண்டு முதலில் சில நாட்கள் நடிக்கச் செல்லும்போது எனக்கு பயம் ஏற்படும். தேவையான முகபாவங்களைக் கொடுக்க முடியுமா என்ற எண்ணம் தான் அதற்கு காரணம். என்றாலும் சில நாட்கள் நடித்த பிறகு அந்த பயம் போய்விடும். "மணிரத்னம் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. விரைவில் அது நிறைவேற இருக்கிறது. அதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. "இந்தி பட உலகில் கரன் ஜோகர் இயக்கத்தில் நடிக்க விரும்பினேன். அது நடந்துவிட்டது. 'காக்கா முட்டை' இயக்குநர் மணிகண்டனுடன் மீண்டும் பணிபுரிய விரும்புகிறேன்," என்று சொல்லும் ஐஸ்வர்யா, தற்போது 'வடசென்னை', 'துருவ நட்சத்திரம்', உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா: எல்லாமே கனவு பாத்திரங்கள்
1 mins read
-

