கௌரவக் கொலைகள் குறித்துப் பேசும் படம்

கௌரவக் கொலைகள் குறித்துப் பேசும் படம்

1 mins read
937a401f-1496-486c-9452-81b262ba0296
-

இப்போதெல்லாம் உண்மைக் கதைகளைப் படமாக்குவதையே கோடம்பாக்க திரைப்புள்ளிகள் விரும்புகின்றனர். காரணம், நேர்த்தியாகப் படமாக்கப்படும் உண்மைக் கதைகளுக்கு ரசிகர் கள் தரும் வரவேற்புதான். அந்த வகையில், தமிழகத்தைப் புரட்டிப்போட்ட இரண்டு நிகழ்வு களை வைத்து உருவாகிறது 'தொட்ரா' என்ற படம். பாக்யராஜி டம் உதவி இயக்குநராகப் பணி யாற்றிய மதுராஜ் என்பவர் இதை இயக்கியுள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் நாயகனாக வும் புதுமுகம் வீணா நாயகி யாகவும் நடித்துள்ளனர். இதில் பாதி ஏற்கெனவே தெரிந்த சங்கதிதான் என்று புலம்பவேண்டாம். இதோ புதுத் தகவல். இந்தப் படம் கௌரவக் கொலைகளை மையப்படுத்தி உருவாகிறதாம். தென் தமிழகப் பகுதிகளில் இத்தகைய கொலை கள் அதிகம் நிகழ்கின்றன.

'தொட்ரா' படத்தில் பிருத்விராஜன், வீணா.