விஜய்யுடன் ஜோடி சேரும் கீர்த்தி

விஜய்யுடன் ஜோடி சேரும் கீர்த்தி

1 mins read
8b351ddf-1d4f-410e-a3a2-fe0cf875df42
-

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, கீர்த்தி சுரே‌ஷுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இது சாத்தியமானால், 'பைரவா'வுக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்வார் கீர்த்தி. தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் படத்தில் நாயகியாகவும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையைப் பற்றிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தமிழில் சூர்யாவுடன் நடித்திருக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அனிருத் இசையமைப்பார் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது ஏ.ஆர்.ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.