நடிகர் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக்குடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்'. இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி நேற்று முன்தினம் வெளியானது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி பழங்குடியினர் தலைவராக நடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல படத்தின் முன்னோட்டக் காட்சியில் அவர் நான்கு விதமான வேடங்களில் தோன்றுகிறார். இந்தப் படத்தில் காயத்ரி, நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து வந்துள்ள புதுமுக நடிகை நிஹாரிகா, ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக் கிறார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்தை '7c's என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்' தயாரிக்கிறது. 'அம்மே நாராயணா என்டர்டெயின் மெண்ட்' வெளியீடு செய்கிறது.
'ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்'
1 mins read
-

