ஒன்றுகூடிய நட்சத்திரங்கள்

ஒன்றுகூடிய நட்சத்திரங்கள்

1 mins read
edd758e9-c311-4cb5-b80c-666dbe4ada2d
-

சிவாஜி, எம்ஜிஆர் நடித்த காலங்களுக்குப் பிறகு 1980களில் நடிக்கத் துவங்கிய தென்னக திரையுலக பிரபலங்கள் ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தொடர்ந்து 8வது ஆண்டாக இந்த ஆண்டும் ஒன்று கூடினார்கள். இந்த ஆண்டு மகாபலிபுரத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த ஒன்றுகூடல் நிகழ்வுக்கு அனைவரும் கருநீலத்தில் உடையணிந்து வந்திருந்தார்கள். அந்த இடம் முழுவதும் ஊதா நிற பூக்கள் நிறைந்த கலைப் பொருட்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. இந்த ஆண்டு இவர்களது கொண்டாட்டங்கள் இரண்டு நாட்களுக்கு நீடித்தன. இரவு 7 மணிக்கு அங்குள்ள கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச் சிக்கு ஒவ்வொரு பிரபலமாக வரத் துவங்கினார்கள். சுகாசினி, லிசி, ராஜ்குமார் சேதுபதி, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு ஆகியோர் அனைவரையும் வரவேற்று உபசரித்தனர்.