புதுடெல்லி: என் பாட்டி இந்திரா காந்தி உள்பட எனது குடும்பத்தினர் அனைவருமே சிவபக்தர்கள் என்றும் இருப்பினும் மதம் என்பது எங்கள் தனிப்பட்ட விஷயம் எனக் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். குஜராத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடியும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் அங்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். குஜராத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல், "சோம்நாத் கோயிலில் பக்தர்களுக்கான வருகைப் பதிவேட்டில் நான் கையெழுத்திட் டேன். இதை தவறாக திரித்துக் கூறி பாஜக அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது. எனது பாட்டியும் எங்கள் குடும்பத்தினரும் சிவபக்தர்கள்," எனக் கூறினார் ராகுல்.
ராகுல்: என் பாட்டியும் எங்கள் குடும்பத்தினரும் சிவபக்தர்கள்
1 mins read

