கார்த்திக்கும் அவரது மகன் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் முதல் படம் 'சந்திரமவுலி'. திரு இந்தப் படத்தை இயக்குகிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். சி.எஸ்.சாம் இசை அமைக்கிறார். இயக்குநர் மஹேந்திரன், இயக்குநர் அகத்தியன், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப், சதிஷ், ஜெகன், மைம் கோபி, விஜி சந்திரசேகர், மனோபாலா மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். படத்தை ஒரே கட்டமாக எடுத்து முடிக்க தயாரிப்பாளர் தனஞ்செயன் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "தமிழ்த் திரையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு அப்பாவும் மகனும் இணைந்து நடிக்கும் படம் இது. 'அனேகன்' படம் மூலம் புதுப்பொலிவுடன் களமிறங்கி கலக்கிய கார்த்திக், தற்பொழுது 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார். தந்தை = மகன் பற்றிய சுவாரஸ்யமான கதையை இயக்குநர் திரு, கார்த்திக்கிடம் சொன்னபொழுது கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போக படத்தில் நடிக்க உடனே சம்மதித்தார்.
மகிழ்ச்சியில் திளைக்கும் கவுதம் கார்த்திக்
1 mins read
-

