தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காதலைச் சொல்லும் 'பியார் பிரேமா காதல்'

1 mins read
19d2881e-53e7-4239-8136-24bdcc0ab318
-

'பிக்பாஸ்' புகழ் ஹரீஷ் கல்யாண், ரெய்சா ஜோடி சேர்ந்துள்ள படம் 'பியார் பிரேமா காதல்'. இளன் இப்படத்தை இயக்கியுள்ளார். யுவன்சங்கர் ராஜா தயாரித்து இசையமைக்கும் படம் இது. இயக்குநர் இளன் இதுவரை யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. எனினும் சில குறும்படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர். அந்த தைரியத்தில் 'கிரக ணம்' என்ற படத்தை இயக்கி வந்தார். அதை முடித்த கையோடு அடுத்த பட வாய்ப்பு கிடைத் திருக்கிறது. "உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் அனைத் துமே காதலை அழகாகவும் அழுத்தமாகவும் சொன்ன படங்கள்தான். அந்தப் படங்களின் இசையும் மக்களை திரைய ரங்குக்கு வரவழைக்க முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. அந்த அடிப்படையில்தான் இந்தப் படத்தையும் உருவாக்கி இருக்கி றேன்," என்கிறார் இளன். காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் இந்தியில் 'பியார்' என்றும் தெலுங்கில் 'பிரேமா' என்றும் தமிழில் 'காதல்' என்றும் குறிக்கும் வகையில் தலைப்பு வைத்துள்ளனராம்.

'பியார் பிரேமா காதல்' படத்தில் ஹரீஷ் கல்யாண், ரெய்சா.