'டார்ச்லைட்' என்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து வருகிறார் சதா. இப்படத்தின் முதல் சுவரொட்டி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் மிகக் கவர்ச்சியாகக் காட்சி தருகிறார் சதா. இந்தச் சுவரொட்டியை தமிழ் சினிமா ரசிகர்கள் இணையத்தில் பரவலாகப் பகிர்ந்து வருகிறார்கள். அப்துல் மஜீத் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே விஜய், பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவான 'தமிழன்' படத்தை இயக்கியவர். பின்னர், 'கி.மு', 'துணிச்சல்', 'பைசா', 'தலகால் புரியல' ஆகிய படங்களை இயக்கினார். தற்போது சதா நடிப்பில் உருவாகும் 'டார்ச்லைட்' படத்தை இயக்கி வருகிறார். இதில் ரித்விகா, இயக்குநர் ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் மீண்டும் நல்ல வாய்ப்புகள் தன்னைத் தேடி வரும் என நம்புகிறாராம் சதா. அதனால் ஒவ்வொரு காட்சியிலும் அதிகம் மெனக்கெட்டு நடித்து வருவதாகத் தகவல்.
அதிகம் மெனக்கெடும் கதாநாயகி
1 mins read
-

