தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனையான 'பொட்டு'

தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனையான 'பொட்டு'

1 mins read
c29a0ff7-545e-49b4-a102-5fc97153c9cc
-

ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனையாவது என்பது அனைத்துப் படங்களுக்கும் அமை வதில்லை. அந்த வகையில் 'பொட்டு' படத்தின் தயாரிப்பாளர் கொடுத்து வைத்தவர் எனலாம். இப்படத்திற்கு தமிழ் மட்டு மின்றி தெலுங்கிலும் விநியோகிப் பாளர்கள் மத்தியில் பலத்த வர வேற்பு கிடைத்திருக்கிறது. அத னால் ஒட்டுமொத்த படக் குழு வி ன ரும் உற்சாகத்தில் உள்ளனர். பரத் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே என மூன்று நாயகிகள். ஷாலோம் ஸ்டூடியோஸ் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித் துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் வடிவுடை யான். "மனிதர்கள் செய்யும் சாகசங் களைவிட, பேய்கள் செய்யும் சாகசங்களுக்கு மக்களிடம் அதிகமாக வரவேற்பு கிடைக்கிறது. அதனால்தான் அனைத்து மொழிகளிலும் பேய்க் கதைகள் வெற்றி பெறுகின்றன. தெலுங்கில் 'பொட்டு' படத்தை என்.கே.ஆர். பிலிம்ஸ் பட நிறுவனம் ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது.

'பொட்டு' படத்தில் இடம்பெறும் காட்சியில் பரத், சிருஷ்டி டாங்கே.