வில்லனாக நடித்த பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் இப்போது நாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். தனா இயக்கத் தில் உருவாகியுள்ள 'படைவீரன்' படத்தில் இவர்தான் நாயகன். அம்ரிதா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் இயக்குநர் பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் அசத்தி உள்ளாராம். சொல்லப் போனால், தமக்கும் பாரதிராஜாவுக்குமான போட்டிதான் இப்படத்தின் மையக் கரு என்கிறார் விஜய் யேசுதாஸ். "போட்டி என்று கூட சொல்ல முடியாது. எங்களுக்குள் ஒரு துடிப்பான உறவு. அதற்குள் ஒரு கதை இருக்கிறது.
இந்தப் படத்தில் நாயகன், நாயகி இடையேயான காதல் அழகாக அமைந்திருந்தாலும்கூட, பாரதி ராஜா சாருக்கும் எனக்குமான காட்சிகள் தான் படத்தின் இதயம் எனலாம். "அதோடு நண்பர்கள், காதல் விவகாரங்களும் இழையோடும். கிராமமும் அது சார்ந்த சில சம்பவங்களும்தான் கதைக்களம். அதை வணிக ரீதியில் கச்சித மாக காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குநர் தனா," என்று பாராட்டு கிறார் விஜய் யேசுதாஸ். 'மாரி' வில்லனாக நடித்த பிறகு இவரை திரையில் காண முடியாமல் போனது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சில கதை கள் கேட்டாராம். எல்லாமே திகில், காதல் என்று ஒரே மாதிரியாக இருந்தனவாம்.

