நிவின்பாலி படத்தில் இருந்து விலகிய அமலா பால்

நிவின்பாலி படத்தில் இருந்து விலகிய அமலா பால்

1 mins read
9a138a5d-120f-48ce-90fe-3d6f3bba3c96
-

நிவின்பாலி நாயகனாக நடிக்கும் படத்தில் இருந்து விலகியுள்ளார் அமலா பால். கால்‌ஷீட் பிரச்சினையே இதற்குக் காரணம் எனக் கூறப் படுகிறது. கேரளாவில் உள்ள காயம்குளம் பகுதியில் வாழ்ந்த ஒருவரைப் பற்றிய படம் இது. இவர் ராபின்ஹுட் போல பணக்காரர்களிடம் இருந்து பணம், பொருட்களைப் பறித்து நலிந்த மக்களுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. கடந்த 1859இல் கொச்சுண்ணி போலிசாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தினார். இவருடைய வாழ்க்கையில் இடம் பெற்ற சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இப்படத்தில் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடிக்க, நாயகியாக அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், கால்‌ஷீட் தேதி பிரச்சினை காரணமாக அமலாபால் இப்படத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தற்போது ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்.