ராகவேந்திர ராவ் இயக்கத்தில் உருவாகி யுள்ள 'பிரமாண்ட நாயகன்' திரைப்படம் தமிழகத் திரைகளில் விஸ்வரூபம் எடுக்கும் விதத்தில் விரைவில் வெளி யாக உள்ளது. ஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் தயாரித் துள்ள இப்படத்தை ஸ்டார் பாக்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிடு கிறது. இசை - மரகதமணி. தெலுங்கில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'ஓம் நமோ வெங்கடேசயா' படத்தின் தமிழ்ப் பதிப்பு இது. விரைவில் தமிழில் வெளியாகும் இப்படத்தில் பெருமாளின் பக்தையாக, ஆண்டாளின் கதாபாத்திரத்தை மைய மாக வைத்து அனுஷ்கா கதாநாயகியாக நடித்துள்ளார். ஆண்டாள் வேடத்தில் உள்ள அனுஷ்காவின் புகைப்படங்கள் இப் போது வெளியிடப்பட்டுள்ளன. மகாபாரத கிருஷ்ணராக நடித்துப் புகழ்பெற்ற சௌரப்ஜெயின் வேங்கடேசப் பெருமாளாக வேடம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார். பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கிற தமிழ்ப்படம் அகிலாண்டகோடி 'பிரமாண்ட நாயகன்.' ராமா என்ற வேங்கடசப்பெருமாள் பக்தனின் உண்மைச் சம்பவத்தை மைய மாகக் கொண்டு இப்படம் ஜனரஞ்சக மாக உருவாகியுள்ளது. இன்றைய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
'பிரம்மாண்ட நாயகன்' படத்தில் ஆண்டாள் வேடத்தில் அனுஷ்கா.

