அமலாவின் நியாயமும் பிரியாவின் அநியாயமும்

அமலாவின் நியாயமும் பிரியாவின் அநியாயமும்

1 mins read
9b0122e2-e260-4d53-85bb-a37715b505e7
-

மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் உருவாகி வரும் 'காயங்குளம் கொச்சுன்னி' படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட அமலாபால் அதிலிருந்து விலகிவிட அவருக்குப் பதிலாக அந்த வாய்ப்பு நடிகை பிரியா ஆனந்த்திற்கு கைமாறியுள்ள செய்தி ஏற்கெனவே தெரிந்ததுதான். இருப்பினும் அமலாபால் இப்படி நாளும் ஏதோ ஒரு புதுக்கதை கூறி சமாளிப்பது வாடிக்கைதான் எனச் சிலர் சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சித்து வருகிறார்கள். ஆனால் படத்தின் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸே„, "அண்மையில் கேரளாவில் பெய்த மழை காரணமாக படப்பிடிப்பின்போது தேக்கம் ஏற்பட்டது.

அதனால் அடுத்ததாக நாங்கள் கேட்ட தேதிகளில் அமலா பால் வேறு படங்களில் ஒப்பந்தம் ஆகியிருந்தார். அதனால் தான் அவரால் நடிக்க இயலவில்லை. மற்றபடி அவருக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை," என விளக்கம் கூறியிருக்கிறார். தமிழில் அடுத்தடுத்து மூன்று படங்கள் இருப்பதால்தான் தன்னால் 'காயங் குளம் கொச்சுன்னி' படத்தில் நடிக்க முடியாமல் போனது என அமலாபாலும் விளக்கம் அளித்துள் ளார். அதேசமயம் இந்தப்படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ள பிரியா ஆனந்த் சொல்லியிருக்கும் தகவல்தான் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. "வரலாற்றுப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் நீண்ட நாள் ஆசை. அதனால் இந்தப்பட வாய்ப்பு வந்ததும் நான் ஏற்கெனவே ஒப்பந்தம் ஆகி யிருந்த மூன்று படங்களைத் தூக்கிப்போட்டு விட்டு இதில் நடிப்பதற்கு வந்து விட்டேன்," என்று கூறியுள்ளார்.