ஆசியாவின் கவர்ச்சி மங்கை பிரியங்கா

ஆசியாவின் கவர்ச்சி மங்கை பிரியங்கா

1 mins read
73b29ab9-ca84-47ca-8cfe-d4deaa31d69e
-

ஆசியாவின் கவர்ச்சிப் பெண்கள் பட்டியலில் 35 வயதாகும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் தீபிகா படுகோன். இம்முறை தீபிகாவை பின்னுக்குத் தள்ளி விட்டு பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்துள்ளார். இந்திப் பட உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. ஹாலி வுட்டுக்குச் சென்று அங்கேயும் பிரபலமாகி வரும் இவர் ஆசியா வின் கவர்ச்சி மங்கைகள் பட்டிய லில் முதலிடம் பிடித்துள்ளார். லண்டனில் உள்ள 'ஈஸ்ட்டர்ன் ஐ' என்ற வார இதழ் ஆசியாவின் 50 கவர்ச்சியான பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தொலைக் காட்சி நடிகை நியா சர்மாவுக்கு 2வது இடமும் தீபிகாவுக்கு 3வது இடமும் கிடைத்துள்ளது. இதில் அலியாபட் 4வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.