காவ்யா மாதவன் இடத்தைப் பிடிக்க முடியாத அனுஷ்கா

காவ்யா மாதவன் இடத்தைப் பிடிக்க முடியாத அனுஷ்கா

1 mins read
e67459f5-051a-4142-96f0-f765ae21eb2e
-

இணையத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகள் பட்டியலில் மலையாள நடிகை காவ்யா மாதவன் இடம்பிடித்து உள்ளார். 'யாஹூ' வெளியிட்ட 2017 ஆம் ஆண்டுக்கான, இணையத் தளத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகளின் பத்துப் பேர் கொண்ட பட்டியலை வெளியிட் டது. அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே தென்னிந்திய நடிகை காவ்யா மட்டும்தான். தென்னிந்திய நடிகைகளில் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா வுக்கும் அனுஷ்காவுக்கும் கிடைக் காத ஒரு கௌரவம் காவ்யவிற்கு கிடைத்துள்ளது. அண்மைக்காலமாக அதிக அளவிலான படங்களிலோ, வெற்றிப் படங்களிலோ நடிக்காமல் இருக்கும் மலையாள நடிகை காவ்யா மாதவனை அதிகம் இணையத்தில் தேடியதற்குக் கார ணமும் கூறப்படுகிறது.