ஜெய் நடித்து ஆண்டுக் கணக்கில் தயாரிப்பில் இருக்கும் 'பலூன்' படம் இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந் தப் படத்தைத் தொடர்ந்து 'பார்ட்டி' படத்திலும் சுந்தர் சி இயக்கத்தில் 'கலகலப்பு 2' படத்திலும் நடித்து முடித்துள்ள ஜெய், அடுத்து சுரேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் ஜெய்யுடன் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ஒரு கதாநாயகியாக ராய் லட்சுமி ஒப்பந்தமாகியிருக் கிறார். இன்னொரு கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமாரும் மற்றொரு கதாநாயகியாக கேத்ரின் தெரெசாவும் நடிக்க இருக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் துவங்குகிறது.
மூன்று நாயகிகளுடன் நடிக்கும் ஜெய்
1 mins read
-

