ரம்யா நம்பீசன் நடித்த 'குள்ளநரிக் கூட்டம்', 'சேதுபதி' போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் அவரது நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இந்நிலையில் சிபியுடன் அவர் இணைந்து நடித்த 'சத்யா' திரைப் படம் அண்மையில் வெளியாகி உள்ளது. 'க்ஷணம்' என்ற தெலுங்குப் படத்தின் தமிழ்ப் பதிப்பான இப்படத்தில் ரம்யா நம்பீசனுக்கு முக்கியமான கதாபாத்திரம். கதை தன்னைச் சுற்றி பின்னப்பட்டு இருப்பதை உணர்ந்து பொருத் தமாக நடித்திருக்கிறார் ரம்யா நம்பீசன். படத்தில் காதல் காட்சிகளை விட உணர்ச்சிபூர்வமான காட்சி கள் அதிகம். எனவே உணர்ச்சி களைக் கொஞ்சம் அதிகம் காட்டி விட்டாலும் மிகைநடிப்பு ஆகிவிடக் கூடிய கதாபாத்திரம். ரம்யா அதை மனதில் வைத்து அளவோடு நடித்திருப்பதால் 'ஸ்வேதா' கதாபாத்திரம் ரசிகர் களின் மனதில் ஒட்டிக்கொள்கிறது.
'தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம்'
1 mins read
-

