வாசுதேவ் பாஸ்கர்: தேசிய விருது பெறுவோம்

வாசுதேவ் பாஸ்கர்: தேசிய விருது பெறுவோம்

1 mins read
6d25ff0a-350c-4efa-bc86-1cbf5186b663
-

ஆசிரியர்கள் மாணவர்களை எப்படி வழி நடத்துகிறார்கள் என் பதைப் பொறுத்துத்தான் அந்த மாணவர்களின் எதிர்காலம் அமையும். அப்படிப்பட்ட கதைக் கருவை கொண்ட படம்தான் 'பள்ளிப் பருவத்திலே' என்கிறார் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர். ஆசிரியரால்தான் ஒரு மாண வனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என்பதை இந்தப் படத்தில் ஆணித்தரமாகக் கூறி உள்ளாராம். "இத்திரைப்படம் உலகில் உள்ள அனைத்து ஆசிரியர் களுக்கும் சமர்ப்பணமாக வெளி யிடப்படுகிறது. ஆசிரியர்களுக்கு மணிமகுடமாக அமையும். "கிராமத்துக்குச் சென்று எப்படி ஒரு மருத்துவர் சேவை செய்கிறார் என்பதை 'தர்மதுரை' படத்தில் பார்த்தோம். அந்தப் படம் எப்படி தேசிய விருது பெற் றதோ அதுபோல், இந்தப் படமும் ஆசிரியர்கள் பற்றிய பெரு மையைக் கூறி தேசிய விருது பெறும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது," என்கிறார் இயக்கு நர் வாசுதேவ் பாஸ்கர்.

'பள்ளிப் பருவத்திலே' படத்தில் ஒரு காட்சி. கோப்புப்படம்