'அனிருத்'

'அனிருத்'

1 mins read
7db0bbee-71e9-4daf-b293-e5edfa1e209e
-

ஸ்ரீகாந்த் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'அனிருத்'. இதில் காஜல் அகர்வால், சமந்தா, பிரணிதா என மொத்தம் மூன்று நாயகிகள். இவர்களுடன் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ‌ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரி‌ஷி ஆகியோரும் உள்ளனர். "நம்மீது அன்பு செலுத்தி நம் அருகிலேயே இருக்கும் உறவுகளை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் நம்மை விட்டுப்போன பிறகு அவர்களை நினைத்து வருத்தப்படுவோம். அப்படி அன்பான ஓர் உறவை இழந்த நாயகன், தனது ஏழு தலைமுறை உறவுகளையும் தேடிக் கண்டுபிடிப்பதுதான் திரைக்கதை. குடும்பத்தில் உள்ள அனைவரும் நெகிழ்வோடு பார்க்கக்கூடிய படம் இது," என்கிறார் ஸ்ரீகாந்த்.