நடிப்பு, வானொலி நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டி வர்ணனையாளர் என ஓடிக்கொண்டே இருக்கிறார் ஆர்ஜே பாலாஜி. எப்படி எல்லாவற்றையும் சமா ளிக்கிறீர்கள் என்றால், "பழகிப் போய் விட்டது," என்று சிரிக்கிறார். "நிறைய, புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். எனக்கென ஒரு நேரடி நிகழ்ச்சி ஒன்றையும் நானே வடிவமைத்து வழங்கி வருகிறேன். "அடுத்த சில ஆண்டுகளுக்கு எனது இந்த ஓட்டம் தொடரும். அதே சமயம் என் குடும்பத்துக்காகவும் நேரம் ஒதுக்குகிறேன். விடுமுறையின் போது பயணம் மேற்கொள்வது, நேரம் கிடைக்கும்போது கிரிக்கெட், பேட் மிண்டன் விளையாடுவது என வாழ்க்கையை அமைத்துக்கொண்டி ருக்கிறேன். "அரசியலுக்கு வருவேனா என்று கேட்கிறார்கள். நிறைய இளையர்களை ஒருங்கிணைத்து பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறோம். இதுவே ஒரு வகையில் அரசியல் தானே? "நீங்கள் வசிக்கும் பகுதியில் ஒரு மரம் வெட்டப்படுவதை பத்து பேருடன் சேர்ந்து தடுத்து நிறுத்துகிறீர்கள் எனில் நீங்களும் அரசியல்வாதிக்கு குறைந்தவர் அல்ல என்பதே என் கருத்து. "இதைத்தான் நான் தினமும் சந்திக்கும் அனைவரிடமும் தவறாமல் சொல்லி வருகிறேன்," என்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.
ஆர்.ஜே.பாலாஜி: அடுத்த சில ஆண்டுகள் ஓட்டம் தொடரும்
1 mins read
-

