மயானத்தில் மலரும் ஒரு காதல் வெற்றி பெறுகிறதா என்பதே 'ஆறடி' படத்தின் கதைக் கரு வாம். சந்தோஷ் குமார் இயக்கு கிறார். ஸ்ரீ சிவகுடும்பம் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் ராஜ், தீபிகா ரங்கராஜ், ஜீவிதா, சாப்ளின் பாலு, பெஞ்சமின், சேலம் டி.சண்முகம், டாம் பிராங்க், சிபி பத்ரிநாத், தினேஷ், சுமதி உள்பட பலர் நடிக்கிறார்கள். "இந்த உலகில் ஒவ்வொரு ஜீவ ராசியும் உயிர்ப் பயணம் மேற் கொள்கின்றன. இந்தப் பயணத்தில் மனித இனம் கடைசியாகச் சென்றடையும் இடம் மயானம். "அந்தச் சூழ்நிலையும் இடமும் எவ்வாறு இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான். "அப்படிப்பட்ட இடத்தில் ஒரு காதல் உதயமாகிறது. இதுவரை ஆண்கள் மட்டுமே மயானத்தில் 'வெட்டியான்' வேலை பார்த்து வருகிறார்கள்.
மயானத்தில் பூத்த காதல் குறித்துப் பேசும் 'ஆறடி'
1 mins read
-

