கூட்டணிக்கு தயாராகும் சூர்யா

கூட்டணிக்கு தயாராகும் சூர்யா

1 mins read
2c4a2c2c-11b6-4383-9d7b-150db3c74a06
-

தங்களது அடுத்தடுத்த படங்களை திட்டமிடுவதில் விஜய், சூர்யா இருவருமே கெட்டிக்காரர்கள். தற்போது நடித்து வரும் படம் முடியும் தறுவாயில் அடுத்த படத்துக்கான இயக்குநரை தெளிவாக தேர்வு செய்து விடுவார் விஜய். இதனால் படப்பிடிப்பு தொடங்கி படத்தின் வியாபாரம் வரை தேவையற்ற சிரமங்கள், சிக்கல்கள் தவிர்க்கப்படும். சூர்யாவைப் பொறுத்தவரை விஜய்யையும் மிஞ்சும் விதமாக அடுத்த இரு படங்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு விடுவார். அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடிக்கும் அவர், அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருப்பது தெரிந்த விஷயம். இந்நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள புதிய படத்தில் சூர்யா ஒப்பந்தமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கே.வி.ஆனந்த், சூர்யா கூட்டணியில் உருவான 'அயன்' மற்றும் 'மாற்றான்' ஆகிய இரு படங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. 'கவண்' படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் தனது அடுத்த படத்துக்கான கதையை எழுதி வந்தார். அதற்கான திரைக்கதையை முடிக்கும் வேலையில் முனைப்புடன் இறங்கியுள்ளார். எழுத் தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரும் இவரும் இணைந்து திரைக்கதை எழுதும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.