சமுத்திரக்கனி: சிரமங்களைச் சந்தித்து வளர்ந்திருக்கிறேன் திரையுலகில் நல்லதோர் இடத்தைப் பிடிப்பது கடினமான விஷயம் என்றும், அதற்காகத் தானும் பல்வேறு சிரமங் களைச் சந்தித்ததாகவும் கூறியுள்ளார் இயக்குநர் சமுத்திரக்கனி. புதுமுக நடிகர்கள் சீனு, எஸ்.ஆர். குணா, ஷிகா ஆகியோர் நடிக்கும் படம் 'வாண்டு'. 'தெறி' படத்தில் வில்லனாக நடித்த சாய்தீனாவும் இப் படத்தில் உள்ளார். எம்.எம்.பவர் சினி கிரியே ஷன்ஸ் வாசன் ஷாஜியும் டத்தோ முனியாண்டியும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். வாசன் ஷாஜி இயக்குநராகவும் அறிமுகமாகிறார். வி.மகேந்திரன், ரமேஷ் ஒளிப்பதிவைக் கவனிக்க, ஏ.ஆர்.நேசன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள், பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இதில் இயக்குநர் சமுத்திரக்கனி, நடிகர்கள் அபி சரவணன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்தினர்.
'வாண்டு' படத்தில் இடம்பெறும் காட்சியில் ஷிகா, சீனு.

