மீண்டும் இயக்கப்போகிறார் தனுஷ்

மீண்டும் இயக்கப்போகிறார் தனுஷ்

1 mins read
082abffa-2204-4e42-8e8c-663036c4dcdb
-

தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வட சென்னை' படத்திலும் நடித்து வருகிறார். நடிகர், பாடகர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் எனப் பல அவதாரங்களை எடுத்து வெற்றி கண்ட தனுஷ், 'பா.பாண்டி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ராஜ்கிரணை வைத்து வித்தியாசமான கதையை இயக்கிய தனு‌ஷின் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் மீண்டும் படம் இயக்கப்போவதாகவும் அதில் தனுஷே நாயகனாகவும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.