முன்தொகை பெறாமல் நடிக்கும் அரவிந்த்சாமிதான் தனக்கு பிடித்த நடிகர் என்று கூறியுள்ளார் அமலா பால். அரவிந்த்சாமி, அமலாபால் நடிப்பில் பிரபல மலையாள இயக்குநர் சித்திக் இயக்கியுள்ள படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. 'எங்கள் அண்ணா', 'காவலன்' போன்ற படங்களை இயக்கிய சித்திக் இப்படத்தை இயக்கி உள் ளார். இப்படத்தின் பாடல் வெளி யீட்டு விழா அண்மையில் நடை பெற்றது. விழாவில் அனைவரையும் வர வேற்றுப் பேசிய படத்தின் தயாரிப் பாளர் முருகன், "இப்படத்தின் நாயகன் அரவிந்த்சாமியை நான் ஏ.எம்.ரத்னம் சார் வழியாகத் தொடர்புகொண்டேன். "சித்திக் அவர்கள் இயக்குகிற இப்படத்திற்கு நீங்கள் கதாநாய கனாக நடிக்க வேண்டும் எனக் கேட்டேன். "உடனே ஒப்புக்கொண்டு எந்த ஒரு முன்பணமும் வாங்காமல் நடிக்க வந்தார். இது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இதனால் ஒரு பெரிய தொகை கடன் வாங்குவதும் அதற்காக வட்டி கட்டுவதும் தவிர்க்கப்பட் டது," எனக் கூறினார்.
அமலாவுக்குப் பிடித்த அரவிந்த்சாமி
1 mins read
-

