'கேங்' தெலுங்குப் படத்தில் சொந்தக் குரலில் பேசும் சூர்யா

'கேங்' தெலுங்குப் படத்தில் சொந்தக் குரலில் பேசும் சூர்யா

1 mins read
452b1dbe-3daf-4dd8-ba53-734c395ab55f
-

சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படம் தெலுங்கில் 'கேங்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை சூர்யா நடித்து தெலுங்கில் வெளியான படங்களுக்கு அவர் குரல் கொடுத்தது இல்லை. ஆனால், முதல் முறையாக 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் தெலுங்கு மறுபதிப்பிற்கு சூர்யாவே குரல் கொடுத்துள்ளார்.