தொலைக்காட்சி நிகழ்ச்சியை பிரதிபலிக்கும் 'அருவி'

தொலைக்காட்சி நிகழ்ச்சியை பிரதிபலிக்கும் 'அருவி'

1 mins read
08227225-62e6-4645-b131-5ab5e75c6418
-

திரைப்பட நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபல தொலைக்காட்சியில் 'சொல்வதெல்லாம் உண்மை' என்று ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி 1,500 தொடர்களைக் கடந்து ஒலிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. அண்மையில் வந்த 'அருவி' படம் இந்நிகழ்ச்சியின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. நிகழ்ச்சியில் வரும் அனைத்தும் நாடகம்தான். இதில் கலந்துகொள்ளும் மக்களை வேண்டுமென்றே அழவைக்கின்றனர். இதில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசுவது எல்லாம் இயக்குநர் சொல்லிக் கொடுப்பதுதான் என்பதுபோல் 'அருவி'யில் காட்டியிருக்கிறார்கள். இந்தக் காட்சிகளுக்குத் திரையரங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.