மித்ரன்: வில்லனாக விரும்பிய கதாநாயகன்

மித்ரன்: வில்லனாக விரும்பிய கதாநாயகன்

1 mins read
b1db1748-aaa4-4eca-9dcc-b15df912d263
-

'இரும்புத்திரை' வில்லனாக நடிக் கிறார் நடிகர் அர்ஜுன். மித்ரன் இயக்கும் இப்படத்தை 'விஷால் ஃபிலிம் பேக்டரி' நிறுவனம் தயாரிக்கிறது. விஷால்தான் நாயகன். நாய கியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தின் கதையைக் கேட்ட தும் வெகுவாக ஈர்க்கப்பட்ட விஷால், உடனடியாக "படத்தை நானே தயாரிக்கிறேன்," என்றா ராம். "அதைக் கேட்டதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் வில்லன் வேடத்தில் தாமே நடிக்க வேண்டும் என விஷால் விரும்பி னார். படத்தைத் தயாரிப்பதாகவும் வேறு ஒருவரை நாயகனாக ஒப் பந்தம் செய்யுங்கள் என்றும் அவர் கூறியதும் அதிர்ந்தேன்.

"பிறகு படாதபாடு பட்டு அவரை நாயகனாக நடிக்க சம்ம திக்க வைத்தேன். அந்த அளவு இந்தக் கதையில் வில்லனுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. இதையடுத்து வலிமை வாய்ந்த வில்லன் வேடத்தில் அர்ஜுன் சாரை ஒப்பந்தம் செய்தோம். "பின்னர் கதையில் சில மாற்றங்களைச் செய்து நாயக னுக்கும் வில்லனுக்கு இணையான முக்கியத்துவம் அளித்தோம். "இன்று சமூக வலைத்தளங் களில் பல்வேறு மர்மங்கள் நிலவு கின்றன. அவை குறித்தும், அவற் றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் அலசி உள்ளோம்.