லட்சுமியின் லட்சியம்

லட்சுமியின் லட்சியம்

1 mins read
d797c7ee-93b5-46da-ace7-fa6acd49f28b
-

நடனத்தையும் தம்மையும் யாராலும் பிரிக்க முடியாது என்கிறார் நடிகை லட்சுமி மேனன். எதிர்காலத்தில் நடன மையம் ஒன்றைத் துவங்கி பல நடனக் கலைஞர்களை உரு வாக்க வேண்டும் என்பதுதான் தனது லட்சியம் என்றும் சொல்கிறார். தற்போது பிரபு தேவாவுடன் நடித்து வரும் 'யங் மங் சங்' படம் மூலம் மீண் டும் கோடம்பாக்க ரசிகர்களை தன் பக் கம் ஈர்க்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார் லட்சுமி. பிரபு தேவாவுடன் நடிப்பது இனிமையான அனுபவமாக உள்ளதாம். "பிரபு தேவா சாருடன் மு த ன் மு றை யா க இணைந்து நடிக்கி றேன். படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து வருகிறது. "அவரது நடனம் குறித்து நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. " அ வ ரு ட ன் இணைந்து நடனம் ஆடுவது போல் எந்தக் காட்சியும் அமையவில்லை. அப்படி ஒரு காட்சி படத்தில் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. எனினும் இந்தப் படத்தில் என்னை ஒரு பரதக் கலைஞராக ரசிகர்கள் பார்க்க முடியும்," என்கிறார் லட்சுமி மேனன்.