பேரங்காடியில் நடக்கும் திகில் கதை 'பேய் பசி'

பேரங்காடியில் நடக்கும் திகில் கதை 'பேய் பசி'

1 mins read
89b7357a-0d0b-4c9c-9af4-19c1da5cca28
-

பேரங்காடி ஒன்றில் நடக்கும் திகில் சம்பவங்களின் தொகுப் பாக உருவாகும் படம் 'பேய் பசி'. இதில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாகவும், அம்ரிதா நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் விபின், புது முகம் நமீதா, டேனியல், பகவதி பெருமாள், கருணாகரன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். 'ரெட் ஈஸ்ட் கிரியே ஷன்' சார் பில் ஸ்ரீநிதி ராஜாராம் தயாரிக்கும் படம் இது. யுவன் சங்கர் ராஜா இசைய மைக்க, டோனி சான் ஒளிப் பதிவைக் கவனிக்கிறார். "ஒரு பேரங்காடியில் பல்வேறு திகில் சம்பவங்கள் நடக்கின்றன. ஒரே இடத்தில் நடக்கும் கதை என்றாலும் எந்த வகையிலும் சுவாரசியம் குறையாதவாறு திரைக்கதையை அமைத்துள் ளோம். "படத்தின் கதைக்குப் பொருத்தமான தலைப்பு குறித்து தீவிரமாக ஆலோசித்தபோது 'பேய் பசி' என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

'பேய் பசி' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.