'இமை'

'இமை'

1 mins read
0e8f6812-373b-4169-b970-566de95c47e4
-

முரட்டு வாலிபனுக்கும் கனி போன்ற அப்பாவிப் பெண்ணுக்கும் இடையில் மலரும் காதல் பற்றிய கதைதான் 'இமை'. இப்படத்தில் நாயகனாக நடித்ததுடன் தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளவர் சரிஷ். படத்தில் நடித்த சரிஷ் தன் அனுபவம் பற்றிக் கூறும்போது, "இது ஒரு போக்கிரியைப் பற்றிய கதை என்று கேள்விப்பட்டதுமே என் தோற்றத்தை இயக்குநர் கூறியபடி மாற்ற ஆரம்பித்தேன். கொழு கொழு உடம்பை இளைக்க வைத்தேன். தாடி வளர்க்கத் தொடங்கினேன். தலையைச் சரியாக வாராமல் முடியை வளர்த்தேன். என் நிறத்தை மங்கலாக்க வெயிலில் நின்று கறுத்தேன். இவ்வளவும் செய்து மாறிய பின், என் தோற்றம் இயக்குநருக்குப் பிடித்து ஒரு வழியாகத் திருப்தி வந்த பிறகுதான் படப்பிடிப்புக்கேச் சென்றேன். "படப்பிடிப்பில் நடித்துப் பார்த்தபோதுதான் நடிப்பது எவ்வளவு சிரமம் என்று புரிந்தது. ஒவ்வொரு படமும் பல கஷ்டங்களுக்குப் பின் உருவாகி வருகிறது என்பது புரிந்தது. இப்போதெல்லாம் ரசிகர்களை ஏமாற்ற முடியாது. உண்மையான உழைப்பும் யதார்த்தமும் இருக்கவேண்டும். இவை இரண்டுமே 'இமை' படத்தில் இருக்கும்.