விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தின் முன்னோட்டக் காட்சியில் பேசிய வசனங்கள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அதனால் படம் வெளிவரத் தடை ஏற்படலாம் என்கின்றது கோலிவுட். விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் 'ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்'. ஆறுமுக குமார் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியானது. அதில், "சீதையைக் கடத்திய ராவணன், சீதையை உயிரோடு வைத்திருந்தான். ஆனால் அவனைக் கெட்டவன் என்கின்றனர். அதே சீதையை மீட்டுச் சென்று, சந்தேகத் தீயில் போட்ட ராமனை, நல்லவன் என்கின்றனர்," என்று விஜய் சேதுபதி பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த வசனம், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதனால் 'மெர்சல்' படத்தைத் தொடர்ந்து பாஜகவின் பார்வை விஜய் சேதுபதி பக்கம் திரும்பி உள்ளது. இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காத விஜய் சேதுபதிக்கு 'ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்' படம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
'ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்'
1 mins read
-

