மதன் கார்க்கி: ரசிகர்களை உடனடியாகக் கவரவேண்டும்

மதன் கார்க்கி: ரசிகர்களை உடனடியாகக் கவரவேண்டும்

1 mins read
deb7e38e-cedf-4d92-9814-ef84179a9388
-

காதல் பாடல்கள் ரசிகர்களை உடனடி யாகக் கவரும் விதமாக இருக்க வேண்டும் என்கிறார் மதன் கார்க்கி. காதல் பாடல் எழுதுவது என்பது எப்போதுமே சவாலாக இருக்கும் என்று குறிப்பிடுபவர், காதல் பாடல் களில் இடம் பெறும் வரிகள் சாதா ரணமாக, எளிமையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 'வேலைக்காரன்' படத்தில் மதன் கார்க்கி எழுதியுள்ள 'இதயனே...' பாடல்தான் இப்போது இளையர்கள் மத்தியில் அதிகம் முணுமுணுக்கப் படுகிறது. சிவகார்த்திகேயன், அனிருத் இணை, இசை ரசிகர்களுக்குச் சிறந்த காதல் பாடல்களை அயராது பரிச ளித்திருப்பதாகக் குறிப்பிடும் மதன், அனிருத்தின் லேசான வாத்தி யமும் சிறப்பான இசையும் எந்தவொரு பாடலையும் வேறு தளத்துக்கு நகர்த்திச் சென்றுவிடும் என்று பாராட்டுகிறார்.