பிரபல இயக்குநர் ஒருவரது படத்தில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் தேசிய விருது பெற வேண்டும் என்கிற அவரது விருப்பம் நிறைவேற அதிக வாய்ப்புள்ளதாகவும் கோடம்பாக்க புள்ளிகள் கூறுகின்றனர். தன் உடல் எடையை மேலும் குறைத்து வருவதாகவும் விருதுகள் பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் கூறுகிறார் அஞ்சலி. எங்கு சென்றாலும், தன்னைப் பார்ப்பவர்களில் பலர் திருமணம் எப்போது என்றே கேட்கிறார்களாம். அவர்களுக்கு எல்லாம் அஞ்சலி தெரிவிக்கும் ஒரே பதில் இதுதான். "அடுத்த ஆண்டு இறுதிவரை நடிக்க கையில் படங்கள் உள்ளன. எனவே, இப்போது திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை. நடிப்புக்காக தேசிய விருது வாங்கவேண்டும் என்பது என் விருப்பம். எனவே, நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்," என்கிறார் அஞ்சலி. 'பலூன்' படத்தில் மீண்டும் ஜெய்யுடன் நடித்ததில் மகிழ்ச்சி அளித்திருப்பதாகவும் அதில் தமக்கு நல்ல வேடம் கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார்.
அஞ்சலி நோக்கம் நிறைவேற வாய்ப்பு
1 mins read
-

