திடீரென கவர்ச்சிப் பாதையைத் தேர்வு செய்துள்ளார் இளம் நாயகி நிவேதா பெத்துராஜ். 'பார்ட்டி' படத்தில் இவர் காட்டியுள்ள கவர்ச்சி கோடம்பாக்கத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை வெளியிட்டுள்ளனர். அதில் நிவேதா நடித்துள்ள முத்தக்காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும், படுக்கை அறையில் 'கயல்' சந்திரனுடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளும் உள்ளன. இதைப் பார்த்து அதிர்ந்து போயுள்ள ரசிகர்கள், நிவேதாவை விமர்சித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் அவரைத் தொடரும் ரசிகர்கள், "அதிர்ச்சியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. நீங்களா இப்படி?" என்று கேட்டுள்ளனர். 'ஒரு நாள் கூத்து', 'பொதுவாக என் மனசு தங்கம்' படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நிவேதா. தற்போது 'டிக் டிக் டிக்', 'பார்ட்டி' ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார்.
கவர்ச்சியால் அதிர வைத்த நாயகி
1 mins read
-

