நீண்ட இடைவேளைக்குப் பிறகு விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'மன்னர் வகையறா' ஜனவரியில் வெளியாக உள்ளது. இப்படத்தை பூபதி பாண்டியன் இயக்கி உள்ளார். தனது சொந்த நிறுவனமான ஏ3வி சினிமாஸ் மூலம் விமல் தயாரித்துள்ள படம் இது. அவரது ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க, பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக், சாந்தினி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே களமிறக்கப்பட்டுள்ளது. பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாம். தற்போது தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளும் பாடல்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அடுத்தடுத்து வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'மன்னர் வகையறா'
1 mins read
-

