காலையில் எழுந்த உடன் தனது கைபேசி எங்கே என்று தேடுவதுதான் மஞ்சிமா மோகனின் முதல் வேலையாக இருக்குமாம். ரசிகர்களுடன் இணையம் வழி உரையாடுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாகச் சொல்கிறார் இந்த இளம் நாயகி. "சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை சொல்வதற்கும், சமூகப் பிரச்சினைகளை விமர்சனம் செய்து 'மீம்ஸ்' போடுவதற்கும் தனித் திறமை வேண்டும். இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருப்பவர்கள் நல்ல அறிவாளிகள், கற்பனைத் திறன் அதிகம் உள்ளவர்கள் என்று கருதுகிறேன். "ஒவ்வொரு முறையும் ரசிகர்களுடன் இணையம் வழி உரையாடும் போது, பல்வேறு விதமான கேள்விகளைக் கேட்கிறார்கள். இதில் விஜய் அல்லது அஜித் இருவரில் யாரைப் பிடிக்கும் என்று ரசிகர்கள் கேட்கும் கேள்வி தான் மிகவும் கஷ்டமானது. அவர்களில் ஒருவரை தேர்ந்து எடுப்பது கடிமானது," என்கிறார் மஞ்சிமா மோகன்.
மஞ்சிமா தினமும் செய்யும் முதல் வேலை
1 mins read
-

