காஜல் கூறும் திடீர் அறிவுரை

காஜல் கூறும் திடீர் அறிவுரை

1 mins read
c8c485c0-7b47-4a73-9e69-b1293bf3efa5
-

"சினிமா நிரந்தரமானது அல்ல. எனவே இதைத் தவிர்த்து இன்னோர் உலகத்தில் பிரவேசிக்கவும் தயாராக இருக்கவேண்டும்," என்று பக்குவமாகப் பேசும் காஜல், நடிப்புக்குப் பிறகு என்ன செய்வது என சிந்திக்கத் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார். ஏதேனும் வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதாம். அதற்கான ஏற்பாடுகள், முதலீடு குறித்து ஆலோசித்து வருகிறார். "நடிகைகள் ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபடவேண்டும். அவர்கள் தகுதிக்கு ஏற்ப அதைத் தேர்வு செய்துகொள்ளலாம். "நான் சினிமாவை விட்டு வேறு தொழிலுக்கு மாறிவிட்டால் மீண்டும் நடிக்க வர மாட்டேன். இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவில் நீடிப்பேன். "அதன்பிறகு வேறு துறைக்கு மாறிவிடுவேன். மற்றவர்களும் இந்த வழியைப் பின்பற்றுவது நல்லது," என்கிறார் காஜல் அகர்வால்.