'இயக்குநர்தான் முக்கியம்'

'இயக்குநர்தான் முக்கியம்'

1 mins read
ee81e6e2-1ea8-464a-a033-ded14833e12e
-

'நிமிர்' படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களைச் சந்திக்க உள்ளார் பார்வதி நாயர். பிரியதர்ஷன் இயக்கியுள்ள இப்படம் ஜனவரியில் வெளியீடு காண்கிறது.

தமிழில் சற்றே கவர்ச்சிகரமான கதாபாத்தி ரங்களில் மட்டுமே நடிப்பதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், 'நிமிர்' படத்தில் வித்தியாசமான, தனக்கேற்ற பாத்திரத்தில் நடித்திருப்பதாகச் சொல்கிறார் பார்வதி. இனி அவர் சொல்வதைக் கேட்போம். "இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த தையே பெரிதாகக் கருதுகிறேன். பிரியதர்ஷன் பெரிய இயக்குநர். அனுபவசாலிகளுடனும் திறமைசாலிகளுடனும் பணியாற்றியவர். ரேவதி, ஷோபனா போன்ற நடிகைகளை வைத்து தரமான படைப்புகளை உருவாக்கியவர். எனவே அவரது குழுவில் இடம்பெறுவது சாதாரண விஷயமல்ல.

"அவரது இயக்கத்தில் நடிப்பது சவாலான, அற்புதமான ஓர் அனுபவம். அவர் எதிலும் நூறு விழுக்காடு திருப்தியை எதிர்பார்ப்பார். முப்பத்து ஆறு நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்து விட் டார். ஏதோ தென்றல் காற்று தழுவிச் சென்றது போல் உணர்கிறேன். "நான் ஏற்றுள்ள கதாபாத்திரம் ரசிகர்களை நிச்சயமாகக் கவரும். படத்தின் நாயகனான உதயநிதியின் பால்ய பருவத்தில் அவரது மனதை ஈர்க்கும் பெண்ணாக நடித்துள்ளேன். "தமிழில் கவர்ச்சியாக நடிப்பதாக என்னை விமர்சிக்கின்றனர். அந்தக் கருத்தை இப்படம் மாற்றும். "அதுமட்டுமல்ல, நான் ஏற்றுள்ள இக்கதா பாத்திரம் போலவேதான் நான் நிஜத்திலும் இருப்பேன். என்னுடைய வயது, உண்மையான இயல்புகள், நான் வளர்க்கப்பட்ட விதம், வாழ்க் கையை நான் அணுகும் விதம் என அனைத்து அம்சங்களுடனும் இந்தக் கதாபாத்திரம் ஒத்துப் போனதில் எனக்கே ஆச்சரியமாகத்தான் உள்ளது.