மாடல் அழகியான சாக் ஷி அகர்வால் அட்லீ இயக்கிய 'ராஜா ராணி' படத்தில் சிறப்புத் தோற்றத் தில் நடித்திருந்தார். 'யோகன்' படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்த இவர், தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'காலா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தமிழ், கன்னடப் படங்களில் நடித்துவரும் சாக் ஷி அகர்வால் முதன் முறையாக மலையாளத்திலும் அடியெடுத்து வைக்கிறார். 'ஓராயிரம் கினாக்கள்' என்ற படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் சாக்ஷி அகர்வால், பிரமோத் மோகன் இயக்கும் படத்தில் பிஜு மேனனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் இவரே சொந்தக் குரலில் பேசுவதற்காக மலையாள மொழியையும் கற்று வருகிறார்.
மலையாளத்தில் அடியெடுத்து வைக்கும் சாக்ஷி
1 mins read
-

