'கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்' என்று கூறுவதுபோல் அதிதிக்கு திரைப்பட வாய்ப்புகள் பல குவிந்து வருகின்றன. 'பிரேமம்' படத்தில் மலர் ஆசிரியராக நடித்த சாய் பல்லவிக்கும் 'இறுதிச் சுற்று' படத்தில் மதியாக நடித்த ரித்திகா சிங்கிற்கும் எவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ளதோ அதேபோன்ற வரவேற்பு 'அருவி' படத்தில் நடித்த அதிதி பாலனுக்கும் கிடைத்துள்ளது. இதில் அவரது நடிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த கோலிவுட்டும் 'வாடி ராசாத்தி' என சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துள்ளது.
இந்தப் படத்தில் அதிதி பாலனை ஒப்பந்தம் செய்வதற்கு முன் இரண்டு முன்னணி நாயகி களிடம் கதையைச் சொன்னாராம் இயக்குநர். ஆனால் அவர்கள் எல்லாம் 'இதெல்லாம் ஒரு கதையா' என்று தவிர்த்துவிட அதிதிக்கு அடித்துள்ளது அதிர்ஷ்டம். இப்போது கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் பலரும் 'கால்ஷீட்' கேட்டு அதிதியை முற்றுகையிட்டு வருகின்றனராம்.

