கவர்ச்சி உடையில் சூர்யா பட நாயகி

கவர்ச்சி உடையில் சூர்யா பட நாயகி

1 mins read
fa66117d-01d3-4a84-89f5-d7f72b71570f
-

நடிகை மீரா மிதுன் நகைக்கடை விளம்பரத்திற்காக எடுத்த புகைப்படம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. 'மிஸ் சவுத் இந்தியா' பட்டத்தை வென்றவர் சென்னையைச் சேர்ந்த மீரா மிதுன். ஒப்பனைப் போடப் பிடிக்காத இவர் மாடல் அழகியான பிறகே ஓப்பனைப் போட ஆரம்பித்தாராம். இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற '8 தோட்டாக்கள்' படம் மூலம் மீரா நடிகையானார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்திச் சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் மீரா மிதுனும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நகைக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளார் மீரா மிதுன். அந்த விளம்பரத்திற்காக அவர் வித்தியாசமாக புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். உடல் நிறத்தைக் கருப்பாக்கி ஒரு புகைப்படத்தில் நகை மட்டுமே தெரியும்படி கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்துள்ளார். மற்றொரு புகைப்படத்திலும் கவர்ச்சியாக இருக்கிறார். மீரா மிதுன் அந்தப் புகைப்படங்களை 'ஃபேஸ்புக்'கில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் 'கூல், அருமை, அழகு டியர்' என்று பாராட்டித் தள்ளியுள்ளனர். சிலர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.