'வேலைக்காரன்' வசூலில் வென்றான்

'வேலைக்காரன்' வசூலில் வென்றான்

1 mins read
3eab7f7f-ce87-4306-a828-ab0cbe32858b
-

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் படம் 'வேலைக்காரன்'. இந்தப் படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் மக்களுக்குத் தேவையான சமூக கருத்துகள் இருப்பதாகவும் கூறி வருகின்றனர். மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்துள்ளதால் 'வேலைக்காரன்' படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் சிவகார்த்திகேயன், நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சென்னையில் மட்டும் இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.89 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதோடு சென்னையில் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்களில் 'வேலைக்காரன்' 7வது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.