கார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ், நந்திதா இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் 'உள்குத்து' படம் நாளை வெளியாகிறது. சரத் லோகிதஸ்வா, பால சரவணன், சாயா சிங், திலீப் சுப்பராயன், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், ஸ்ரீமன், செஃப் தாமோதரன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பணப் பிரச்சினை காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இப்போது சிக்கல்கள் தீர்ந்து படம் வெளியாகிறதாம். இதில் மீனவர்களின் வாழ்க்கைச் சிரமங்களை யதார்த்தமான போக்கில் பதிவு செய்துள்ளதாகக் கூறுகிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு. "இன்றைய தேதியில் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்தாலும் அது போதாமல் கடன் வாங்க வேண்டியது உள்ளது. ஏன் இப்படி ஒரு நிலைமை? மீனவர்கள் கந்து வட்டியில் சிக்கித் தவிக்கிறார்கள். இதையெல்லாம் படத்தில் அலசி உள்ளோம்," என்கிறார் இயக்குநர்.
மீனவர்கள் படும் சிரமங்களைச் சொல்ல வருகிறது 'உள்குத்து'
1 mins read
-

