'பலூன்' திரைப்படம் வெளியான பிறகு தன்னைக் கையில் பிடிக்க முடியாது என்று சிரிக்கிறார் ஜனனி அய்யர். வேறொன்றுமில்லை... இப்படத்தில் மிகச் சிறப்பானதொரு கதாபாத்திரம் அமைந்துள்ளதாம். எனவே படம் வெளியானதும் ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறாராம். சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி அய்யர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'பலூன்'. '70 எம் எம்' மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. "இதில் கடந்த 1980களில் தோன்றும் கதாபாத்திரமாக நான் நடித்திருக்கிறேன். அந்தக் காலத்து பெண் போல ஆடை அணிந்து நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. "நடை, முகபாவனைகளிலும் அந்தக் காலத்து பெண்களைப் பிரதிபலித்திருக்கிறேன். நான் தமிழ்ப் பெண் என்பதால்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் தமிழ்ச் சினிமாவில் என்னை நிலைநிறுத்தும்," என்கிறார் ஜனனி அய்யர்.
நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஜனனி
1 mins read
-

