ஒப்பனை தேவையில்லை என்கிறார் நடிகை சாய்

ஒப்பனை தேவையில்லை என்கிறார் நடிகை சாய்

1 mins read
ae9fb2d4-16ee-451b-acad-87ed4d6d6caf
-

பெண்கள் அழகுக்காக ஒப்பனை செய்துகொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்கிறார் நடிகை சாய் பல்லவி. மாறாக பெண்கள் தங்கள் இயற் கையான அழகுடன் வலம் வந்தாலே போதும் என்றும் அந்த அழகு அனைவராலும் வசீகரிக்கப்படும் என் றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல; இயற்கையான அழகுக்கு கிடைக்கும் அங்கீகார மானது பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் என்றும் இதற்கு 'பிரேமம்' படத்தில்தான் ஏற்று நடித்த கதாபாத் திரம் நல்ல உதாரணமாக இருந்தது என்றும் கூறுகிறார் சாய் பல்லவி. 'பிரேமம்' படத்தில் நடித்தபோது இவருக்கு ஏராளமான முகப்பருக்கள் இருந்தன. அவற்றை நீக்கிவிட்டு நடிக்க விரும்பியபோது, அப்படத்தின் இயக்குநர் அல்போன்சா 'அதெல்லாம் தேவையில்லை' என்று கூறிவிட்டாராம்.

மேலும் அறவே ஒப்பனை தேவை யில்லை என்றும் கூறியிருக்கிறார். சாய் பல்லவியும் இதற்கு எதிர்ப்போ மறுப்போ தெரிவிக்கவில்லை. "படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. எனது முகப்பருக்கள் முகத் துக்கு அழகு கொடுத்ததாக படம் பார்த்த பலரும் பாராட்டினார்கள். பெண்கள் ஒப்பனை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. "சிறு வயதில் இருந்தே நடனத்தில் எனக்கு அதிக விருப்பம் இருந்தது. படித்துக்கொண்டே நடனம் கற்றுக் கொண்டேன். அதன்பிறகு சினிமா வில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் என் தந்தைக்கு நான் நடிக்க வருவது பிடிக்கவில்லை. மருத்துவம் படிக்க ஜார்ஜியாவுக்கு அனுப்பி விட்டார்," என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.