புதுமுகங்களின் திரைவலம்

புதுமுகங்களின் திரைவலம்

1 mins read
97f8f0d2-f93b-494e-8584-e43ff68a4408
-

தயாரிப்பாளர்களின் கவலைக்குரிய நிலை, நடிகர்களின் சம்பள விவகாரம், திரைப்படத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச் சினைகள் என கோடம்பாக்கத்தில் நாள் தோறும் ஏதேனும் ஒரு விவகாரம் பெரிதாகப் பேசப்படுவது வாடிக்கை. அவ்வப்போது திரையுலகத்தினர் மத்தியில் மோதல் ஏற்படுவதும் வழக்கம். இவற்றுக்கு மத்தியில் படத் தயாரிப்பு, புதுமுகங்களின் அறிமுகம், வெற்றி விழாக்கள் என பல நல்ல விஷயங்களும் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றன. இந்தாண்டு தமிழ்த் திரையு லகில் ஏராளமான புதுமுகங் கள் அறிமுகமாகி உள் ளனர். குறிப்பாக அறி முக நாயகிகளின் எண்ணிக்கை அதிகம். வழக்கம் போல் தமி ழகம் மட்டு மல் லாது கேரளா, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் கோடம்பாக்கத்தில் கதாநாயகி யாகும் ஆசையுடன் அப்பகுதியை முற்றுகையிட்டனர்.